Posts

ஒரு பூவும் கருவண்டும்

        ஒ ரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில்    சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது.         அதற்கு அந்தப் பூ, “பூக்களின் தோற்றம் வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டா என் வாட்டத்துக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும்!” என்றது.  “பூக்களின் வளர்ச்சில் ஏழு நிலைகளா? சொல்லு... சொல்லு” என ஆர்வமானது வண்டு.  ‘`ஒரு பூ முதன்முதலா செடியில் உருவாகும்போது ‘அரும்பு’ எனச் சொல்வாங்க. அப்படி நான் உருவானபோது, ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. தாய்ச்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு. என் சகோதரிகள், பிரியமா நடந்துக்கிட்டாங்க. மழை, வெயில், காற்று, பனியினால் எனக்குக் கெடுதல் வந்துடக் கூடாதுனு, இலைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டேன். அரும்புதான் என் மழலைப் பருவம். மிகவும் இனிமையான பருவம்!” என்றது பூ. ‘`ஆஹா அருமை. பூக்களின் இரண்டாம் நிலை?’’ - கேட்டது கருவண்டு....